Welcome to Alumni & Corporate Relations
ஜுரம், ஆக்சிஜன், சுவாச அளவு கண்காணிக்கும் ரிமோட் சாதனம் அறிமுகம்! (Remote device introduced to monitor fever, oxygen and breathing levels)

ஐஐடி மெட்ராஸ்‌ மற்றும்‌ HELYXON நிறுவனம் கோவிட்-19 சிகிச்சைக்காக உருவாக்கியுள்ள சாதனம் இது.

ஐஐடி மெட்ராஸின்‌ ‘ஹெல்த்கேர்‌ டெக்னாலஜி இன்னோவேஷன்‌ சென்டர்’‌ (HTIC) மற்றும்‌ IIT மெட்ராஸ்‌ ரிஸர்ச்‌ பார்க்கில் இயங்கும் ஹெல்த்கேர்‌ ஸ்டார்ட்‌அப்‌-பான Helyxon, ஆகிய இரண்டும் ஒன்றிணைந்து கோவிட்-19‌ நோய்க்காக உருவாக்கியுள்ள ‘ரிமோட்‌ பேஷன்ட்‌ மானிடரிங்‌ ஸொல்யூஷன்’‌ ‘Remote patient monitoring solutions’ என்ற தீர்வை வெற்றிகரமாக முடித்துள்ளதாக அறிவித்தது.

மார்க்கெட்டில்‌ வெளியாகும் இந்த சாதனம்‌ ‌அதன் வகையிலேயே முதலாவதாகும்‌.இந்த கருவி நான்கு மிக முக்கியமான அளவறைகளான – காய்ச்சல்‌, ஆக்ஸிஜன்‌ ஸாச்சுரேஷன்‌, சுவாச அளவீடு‌ மற்றும்‌ இதயத்துடிப்பு ஆகியவற்றை மிகத்‌ துல்லியமாக தொடர்ந்து கண்காணிக்கிறது.

இந்த சாதனம்‌ ஏற்கனவே அரசு பொது மருத்துவமனைகள்‌ மற்றும்‌ தனியார்‌ மருத்துவமனைகள்‌ மற்றும்‌ வீட்டிலேயே தங்கி சிகிச்சை பெற்று வரும்‌ 2,000-க்கும்‌ மேற்பட்ட நோயாளிகளைச் சென்றடைந்துள்ளது. மேலும்‌ 5,000 கருவிகளை உற்பத்தி செய்யும்‌ பணி தீவிரமாக நடந்தேறி வருகிறது என ஐஐடி அறிக்கை குறிப்பிட்டுள்ளது.

நாளுக்கு நாள்‌ பெருகிக்‌ கொண்டே போகும்‌ இதன்‌ டிமாண்டை கருத்தில்‌ கொண்டு உற்பத்தி விரைவுப் படுத்தப்பட்டிருக்கிறது.

கான்‌ஃபிகுரேஷன்‌ மற்றும்‌ பாராமீட்டர்களைப்‌ பொறுத்து இந்த சாதனத்தின்‌ விலை ரூ.2,500 முதல்‌ ரூ.10,000 வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது‌ முற்றிலுமாக தன்னிறைவையும்‌, பிற தேவையில்லாமல்‌ தனித்து செயல்படக்கூடியதுமாகும்‌ மற்றும்‌ இது எங்கு வேண்டுமானாலும்‌ எடுத்துச்‌ செல்லக்கூடியது, வயர்லஸ்‌ மற்றும்‌ நோயாளியின்‌ விரலிலேயே பொருத்தக்கூடியதாகும்‌.

இந்த அளவீடு மொபைல்‌ போன்‌ அல்லது சென்ட்ரல்‌ மானிடரிங்‌ ஸிஸ்டத்தில்‌ ஸ்ட்ரீமிங்‌ செய்யப்படும். இந்த சாதனம்‌ மீண்டும்‌ உபயோகிக்கக்‌ கூடியதாகும்‌ மற்றும்‌ ஓராண்டுக்கும்‌ அதிகமாக உழைக்கும்‌. மருத்துவமனைகள்‌, மருத்துவர்கள்‌ கோவிட்‌ அப்பாற்பட்ட நோயாளிகளின்‌ சிகிக்சைக்காகவும் இச் சாதனத்தை உபயோகிக்கலாம்‌.

இந்த சாதனம்‌ உருவாக்கப்பட்ட செயல்முறையை விளக்கிய IIT மெட்ராஸ்‌ ஃபாகல்டி மற்றும்‌ ஹெட்‌ ஆஃப்‌ ஹெல்த்கேர்‌ டெக்னாலஜி இன்னோவேஷன்‌ (HTIC), புரொஃபஸர்‌ மோகனசங்கர்‌ சிவப்பிரகாசம்‌,

“மருத்துவ டிவைஸ்களாக பொருத்திக்‌ கொள்வதற்காக மணிக்கட்டில் கட்டக்கூடிய பேண்ட்‌ மற்றும்‌ வேரபிள்ஸ்‌ போன்றவற்றை உருவாக்க முயற்சிகள்‌ மேற்கொள்ளப்பட்டன. ஆனால்‌ மருத்துவமனைகள்‌ மற்றும்‌ டாக்டர்கள், நோயாளிகளைக் கண்காணிக்கக் கூடிய மருத்துவ மானிட்டர்களுக்கு இணையான கருவி வேண்டும் என்பதில் குறிப்பாக இருந்தனர். இவை தோயாளிகளின் உடல் அளவீடுகளை துல்லியமாக தருபவையாகவும் இருக்கவேண்டும் என்று தெரிவித்திருந்தனர். இது எங்களுக்கு தெளிவையும், இக்கருவியை உருவாக்க உந்துதலையும் அளித்தது,” என்றார்.

மேற்கொண்டு அவர்‌ கூறுகையில்‌, இதன்‌ விளைவாக, தொழில்நுட்பரீதியான சவால்கள்‌ இந்த சாதனத்தை உருவாக்க வழி செய்து, இது மருத்துவரீதியாக நோயாளிகளுக்குத் தேவைப்படும் தரத்தை நிறைவு செய்யக்கூடியதாக அமைந்தது. அதே வேளையில்‌ இதன்‌ விலை பத்தில்‌ ஓரு பங்காக இருந்ததோடு, நோயாளிக்கு இதை மிகவும் எளிதாக பொருத்த இயன்றதோடு அதற்கு எவ்வித பயிற்சியும் தேவையில்லை என்ற சிறப்பம்சத்தை கொண்டிருக்கிறது என்றார்.

மிக முக்கியமான டெக்னாலஜியானது ஆண்டு முழுவதுமாக நீடித்த மல்டி-சென்ட்ரிக் ஆய்வால் சென்னையைச் சேர்ந்த பல்வேறு மருத்துவக் கழகங்களால் தற்போதைய தரக் குறிப்புடன் துல்லியம் மற்றும் செயல்பாட்டிற்காக மதிப்பிடப்பட்டது. குறிப்பிடும்படியாக இது கோவிட் நோய்க்காக என்றாலும், மருத்துவர்கள் மற்றும் நர்ஸ்கள் நோயாளியுடன் நெருக்கமான தொடர்பை ஏற்படுத்தும் நிலையானதை இது குறைத்து விடும்.

அதோடு PPE மற்றும் மானிட்டரிங் உபகரணத்தில் குறிப்பிடும்படியான சேமிப்பின் அனுகூலம் கிடைப்பதை மருத்துவமனைகள் தெரிந்து கொண்டன. கிளினிக்கல் ரீதியாக கிடைக்கப்பெற்ற முடிவுகளின் அடிப்படையில் இந்த குழு, குறைந்த செலவில் மருத்துவமனையோ அல்லது வீட்டிலேயோ, எங்கு வேண்டுமானாலும் நோயாளிகளை கண்காணிப்பதற்காக எளிதான மற்றும் உபயோகிக்க சுலபமான இந்த சாதனம் உருவாக்கப்பட்டது.

இந்த ப்ராடக்டைப்பற்றி HELYXON நிறுவனர் விஜய் ஷங்கர் ராஜா குறிப்பிடுகையில்,

“இது மானிடரிங் டிவைஸிற்கும் மேற்பட்டதாகும். டாக்டர்கள் மற்றும் மருத்துவமனை நிர்வாகம் அளித்த அபிப்பிராயங்கள் மற்றும் ஆலோசனைகளின் அடிப்படையில் இது உருவாக்கப்பட்டு, உயிருக்குப் போராடும் ஆபத்தான நிலையில் உள்ள நோயாளிகளுக்கு பயன்பெறும் குறைந்த செலவு சாதனம் ஆகும். வீட்டிலேயே தங்கி சிகிச்சை எடுத்துக் கொள்ளும் நோயாளிகளின் தன்னம்பிக்கையையும் இது உயர்த்தும்,” என்றார்.

தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், ஸ்டான்லி மருத்துவமனை, இன்ஸ்டிடியூட் ஆஃப் ஆப்ஸ்டெட்ரிக்ஸ் அண்ட் கைனாகாலஜி ஆகியோர் இந்த சாதனங்களை வாங்குவதற்கு முன்வந்துள்ளனர். இந்தத் தீர்வு மருத்துவமனியில் உள்ள நூற்றுக்கணக்கான நோயாளிகளின் நோயை அளவிடக் கூடியதாக அமையும். இதன் மென்பொருள் தளம் நோயாளியின் நோய் அதிகமாவதைக் கண்டு உடனே எச்சரிக்கும்.

மேலும் டாக்டர்கள் மற்றும் மருத்துவமனைகள் இடையே டெலி கன்ஸல்டேஷனுக்கும் இதை உபயோகப்படுத்திக் கொள்ளலாம்.