Welcome to Alumni & Corporate Relations
பாம்பன் பாலத்தில் சென்னை ஐ.ஐ.டி., குழு ஆய்வு (IIT Madras Committee inspects Pamban Bridge)

நுாற்றாண்டு கண்ட பாம்பன் ரயில் பாலத்தின் நடுவில் உள்ள துாக்கு பாலம் பலவீனமாகி வருவதால், ரூ.250 கோடியில் புதிய பாலம் கட்டுமான பணி முழுவீச்சில் நடக்கிறது. ஊரடங்கால் 6 மாதத்திற்கு பின் அக்.,2 ல் ராமேஸ்வரத்திற்கு ரயில் போக்குவரத்து துவங்கிய நிலையில் அக்.,3ல் துாக்கு பாலம் மேல்புறத்தில் லேசான விரிசல் ஏற்பட்டதாக சென்சார் கருவியில் தெரியவந்தது.

அக்.,4ல் ரயில்வே பொறியாளர்கள் ஆய்வு செய்த நிலையில் சென்னை ஐ.ஐ.டி.,யின் இரும்பு கட்டுமான பிரிவு பொறியாளர்கள் 5 பேர் துாக்கு பாலத்தில் விரிசல் ஏற்பட்டதாக கூறப்படும் இடம், சென்சார் கருவியை ஆய்வு செய்தனர். விரிசல் ஏற்பட்டதற்கான அறிகுறி தெரிய வில்லை. இதனையடுத்து அனைத்து சென்சார் கருவியையும் ஆய்வு செய்ய உள்ளதால் இன்றும் (அக்.,7) பணி தொடர உள்ளது.