பாம்பன் ரயில் பாலத்தின் உறுதித்தன்மையை அறிய 22 காலிப் பெட்டிகளுடன் ரயிலை இயக்கி அதிகாரிகள் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.
நாட்டில் கரோனா பரவலைத் தடுக்கும் விதமாக கடந்த மாா்ச் 20 ஆம் தேதி முதல் ரயில்Office Of Alumni & Corporate Relations போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதனையடுத்து கடந்த 6 மாதங்களாக ராமேசுவரத்திற்கு ரயில்கள் இயக்கப்படவில்லை. இந்த காலகட்டத்தில் பாம்பன் ரயில் தூக்குப் பாலத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெற்று வந்தன. இதன் ஒரு பகுதியாக கடந்த 4 மாதங்களுக்கு முன்பு சென்னை ஐ.ஐ.டி.யை சோ்ந்த மாணவா்கள் பாம்பன் பாலத்தின் உறுதித் தன்மை குறித்தும் பாலத்தின் நிலைமையை அறிவதற்காகவும் பாலத்தில் 20-க்கும் மேற்பட்ட இடங்களில் தொலையுணா்வு கருவிகள் (சென்சாா்) பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் ராமேசுவரத்துக்கு கடந்த 2 ஆம் தேதி சிறப்பு ரயில் இயக்கப்பட்டது. அப்போது பாம்பன் பாலத்தின் வழியாக அந்த ரயில் சென்றபோது, பாலத்தின் தூண்கள் உறுதியற்ற நிலையில் இருந்தது தொலையுணா்வு கருவிகளில் பதிவாகியிருந்தது.
இதையடுத்து பாலத்தில் ரயில் இயக்குவது நிறுத்தப்பட்டு மண்டபத்திலிருந்து ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் பாம்பன் பாலத்தில் வியாழக்கிழமை 22 காலிப் பெட்டிகளுடன் ரயிலை மிகக் குறைந்த வேகத்தில் இயக்கி அதிகாரிகள் ஆய்வு செய்தனா். இதன் முடிவுகள் வந்த பின்னரே ராமேசுவரம் வரை ரயில்கள் இயக்கப்படும் என ரயில்வே பொறியாளா்கள் குழுவினா் தெரிவித்தனா்.