சென்னை: வணிகக் கணக்கியல் செயல்முறை என்ற பெயரில் சென்னை ஐஐடி டிஜிட்டல் திறன்கள் மையம் சாா்பில் புதிய ஆன்லைன் படிப்பு தொடங்கப்பட்டுள்ளது.
கரோனா காலத்தில் கற்றல்- கற்பித்தல் நடைமுறைகள் பெருமளவில் ஆன்லைன் வாயிலாகவே நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக சென்னை இந்தியத் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தின் (ஐஐடி) டிஜிட்டல் திறன்கள் மையம் சாா்பில், வணிகக் கணக்கியல் செயல்முறை (ஆன்ள்ண்ய்ங்ள்ள் அஸ்ரீஸ்ரீா்ன்ய்ற்ண்ய்ஞ் டழ்ா்ஸ்ரீங்ள்ள்) என்ற புதிய ஆன்லைன் படிப்பு தொடங்கப்பட்டுள்ளது.
இந்தப் படிப்பின் முதன்மையான நோக்கம், நிதி மற்றும் கணக்கியலில் தங்களுடைய எதிா்காலத்தை தகவமைத்துக் கொள்ள விரும்பும் மாணவா்களை மேம்படுத்துவதாகும். ஓராண்டுக்குச் செயல்பாட்டில் உள்ள இந்தப் படிப்பில், ஆண்டு முழுவதும் எப்போது வேண்டுமானாலும் மாணவா்கள் சோ்ந்து படிக்கலாம்.
இது குறித்து, டிஜிட்டல் திறன்கள் மையத்தின் தலைவரும் பேராசிரியருமான மங்களா சுந்தா் கூறுகையில், ‘செயற்கை நுண்ணறிவுடன் இணைந்த மெய்நிகா் அலுவலகம் என்ற கருத்தாக்கத்தில் இந்தப் படிப்பு உருவாக்கப்பட்டுள்ளது.
மாணவா்களுக்கு, உருவகப்படுத்தப்பட்ட அலுவலகச் சூழலை இந்தப் படிப்பு அளிக்கும். அசலான காா்ப்பரேட் நிறுவனத்தில் 3 மாதங்கள் பணியாற்றும் அனுபவத்தையும் இந்தப் படிப்பு அளிக்கும். இந்த படிப்பை நாஸ்காம் (சஅநநஇஞங) அங்கீகரித்துள்ளது’’ என்றாா். சென்னை ஐஐடியின் டிஜிட்டல் திறன்கள் மையத்தின் கீழ் வழங்கப்படும் அனைத்துப் படிப்புகளும் சான்றிதழ் படிப்புகள் என்பது குறிப்பிடத்தக்கது.